டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் ரத்து. - உயர்நீதிமன்றம். பாதிப்பு யாருக்கு ? விளக்கம்


அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களைப் பொதுப்பிரிவில் வைக்காமல் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வைத்து முடிவுகளை வெளியிட்டு இருப்பதால் ரத்து செய்வதாக கூறியுள்ளது.

இது உண்மை என்றால் தீர்ப்பும் சரிதான்.

இதன் மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் தேர்வானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

கள்ளத்தனமாக பொதுப்பிரிவில் இடம் பெற்றவர்களே பாதிக்கப்படுவார்கள். பதற வேண்டியது அவர்கள் தான்.

மேலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் பெற்றவர்களை பொதுப்பிரிவுக்கு மாற்றும் போது மேலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இன்னும் சிலருக்கு வாய்ப்ப்புகள் கிடைக்குமே ஒழிய ஏற்கனவே இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் பெற்றவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.

உதாரணமாக, நான் ஒரு 90 மதிப்பெண் எடுத்திருக்கிறேன் என்று கொள்ளுங்கள். என்னைக் கொண்டு போய் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வைத்து விட்டு என்னைவிட கம்மியாக மதிப்பெண் எடுத்த அதாவது ஒரு 70 - 80 எனக் கொள்ளுங்கள். அவனை பொதுப் பிரிவில் வைத்தால் அது தவறு தானே. 

அப்போ சரி எதுவெனில் என்னை முதலில் பொதுப்பிரிவில் வைத்துவிட்டு, அவனுக்கு வாய்ப்பு இருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வைக்க வேண்டும். இல்லையெனில் வெளியேற்ற வேண்டும். என்னைப் பொதுப் பிரிவுக்கு மாற்றும் போது ஏற்கனவே நான் இருந்த இடத்துக்கு வெளியில் இருந்து ஒருவர் அழைக்கப்படுவார். அப்போ வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஒரு 100 பேர் தேர்வு செய்யும் பட்சத்தில், 69% இட ஒதுக்கீடு போக முதலில் 31 பேருக்கு மேலிருந்து கீழாக மதிப்பெண்கள் வாரியாக பொதுப்பிரிவில் அமர்த்த வேண்டும். இதில் அனைத்து சாதியினரும் இடம் பெறுவர். ஏனெனில் பொதுப்பிரிவு அனைவருக்கும் பொதுவானது. இதில் பொதுப்பிரிவுக்கான வயது வரம்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் .

31 பேரை நிரப்பிய பிறகு தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் அந்தந்த பிரிவுக்கு உட்பட்டவர்களை மதிப்பெண்கள் வாரியாக அமர்த்த வேண்டும்.

இது பட்டியலினத்துக்கு மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும்.

Post a Comment

0 Comments