*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வேண்டி ஒன்பது நாட்கள் தொடர் முற்றுகை போராட்டங்கள் சென்னையிலும், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.*
*அரசு இதுவரை ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றாததால் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மூத்த ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் மதிப்புமிகு ஐயா திரு செ.முத்துச்சாமி அவர்கள் தலைமையிலான _தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி_ நாளை 28.02.2024 போராட்ட களத்தில் பங்கு பெறுகிறது.*
*நமக்கு ஆதரவாக போராட்ட களம் இறங்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட / வட்டார பொறுப்பாளர்களை கனிவோடு வரவேற்று கோரிக்கை வாழ்த்தி பேச வாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்காக போராட்ட களமிறங்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை மனமார வாழ்த்தி வரவேற்கிறது SSTA.*
*இது ஒரு இயக்கத்திற்கான போராட்டமாக கருதாமல் 14 ஆண்டுகளாக அழிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களை மீட்டெடுக்கும் போராட்டமாக கருதி அனைத்து அரசு ஊழியர்கள் /ஆசிரியர் இயக்கங்களும் நேரடியாக பங்கு கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் பேரழிவை தடுக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.*
*ஜே.ராபர்ட்*
*SSTA- மாநில தலைமை*
மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.