இதில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த பேச்சில், அனைத்து முதுநிலை டாக்டர்களுக்கும், ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணைவிரைவில் வெளியிடப்படும் என, அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து, டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:அமைச்சருடன் நடந்த பேச்சில் சுமுகத்தீர்வு ஏற்பட்டுள்ளது. அரசாணை 293ன்படி, முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு, 5,500 ரூபாய்; 9,000 ரூபாய் என, இரண்டு வகையாக வழங்கப்பட்டு வந்தது.தற்போது, அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கும் ஒரே மாதியாக, 9,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பட்டய படிப்பு டாக்டர்களுக்கும் 5,000 ரூபாய் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பணி மூப்புக்கு ஏற்ப, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதுதொடர்பான, 354 அரசாணையை பரிசீலிக்க, கமிட்டி அமைக்கப்படும் என்றும், அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.