அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...
💡 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்!
💡 சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்!
💡 தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்!
💡 ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது!
💡 மின்வயர் இணைப்புகளைத் திறந்த நிலையில் இல்லாமல் (Insulation Tape) இன்சுலேசன் டேப் சுற்றி வெளிப்புற மின் காப்பு செய்ய வேண்டும்!
💡 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்!
💡 மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்… என எடுத்துரைத்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.