''அடுத்தாண்டு நடக்கவுள்ள பார்லி., தேர்தலுக்கு முன்பாக, எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை,'' என்று மத்திய நிதித்துறை செயலர் டி.வி., சோமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் அரசுகள், சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிக்கையை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஓட்டுகளை பெறும் நோக்கில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 54 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எனினும், சம்பள கமிஷன் அமைப்பது போன்ற திட்டம் எதுவும் அரசிடம் நிலுவையில் இல்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.