*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்*
*நாள்:-21-12-2023*
*கிழமை:-வியாழக்கிழமை*
*திருக்குறள்:*
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
*குறள்:325*
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
விளக்கம்:
தனது நிலைக்கு பயந்து துறவுக் கொள்பவர்களை காட்டிலும் கொலைக்கு பயந்து கொல்லாமை மேற்கொள்பவரே தலைச் சிறந்தவர்.
*பழமொழி :*
Justice delayed is justice denied
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்
*இரண்டொழுக்க பண்புகள் :*
.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்
*பொன்மொழி :*
ஆயிரம் அறிவுரைகளை
விட ஒரு அனுபவம்
சிறந்த பாடத்தை
கற்றுத்தரும்.
*பொது அறிவு :*
1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?
தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி)
*English words & meanings :*
osprey (n)- the sea eagle கடல் பருந்து. outbreak (n)- a beginning தொடக்கம், திடீர் எழுச்சி
*ஆரோக்ய வாழ்வு* :
இலுப்பை பூ : சங்க காலம் முதல் இன்றுவரை மருத்துவத்திறகாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி இருமல், வயிற்றுப்புண், மூலநோய்கள் சுவாசக்கோளாறு, காயங்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பை பூ ஊறு காய், காசநோய்க்கு அரிய மருந்தாகும்.
*டிசம்பர் 21*
ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்(தெலுங்கு: பிறப்பு: :திசம்பர் 21, 1972), அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
*நீதிக்கதை*
மனம் இருந்தால் இடம் உண்டு
பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது. நடக்க முடியவில்லை . அருகில் ஒரு குடிசை காலியாக இருந்தது. அங்கே சென்று படுத்தார்.
சிறிது நேரத்தில், மற்றொரு பெரியவர் வந்தார். “இந்த ஊரில் ஒருவர் பணம் தர வேண்டும். அவர் வீட்டில் இல்லை, வீடு பூட்டிக் கிடக்கிறது. காலையில் அவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இரவு இங்கே தங்குவதற்கு இடம் கிடைக்குமா?” என்றார்.
“நிச்சயம் இடம் உண்டு. இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் உட்கார்ந்து கொள்ளலாம்; வருக” என்று அவரை வரவேற்றார்.
இருவரும் தரையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, மற்றொரு பெரியவர் வந்தார். “ஐயா, மழை பெய்கிறது.” இரவு இங்கே தங்கிக் கொள்ள இடம் கிடைக்குமா?” என்றார்.
“தாராளமாக இடம் உண்டு. “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம். அவ்வளவுதான் இங்கே இடம் உள்ளது.” என்று அவரை வரவேற்றனர் இருவரும்.
மூவரும் இரவு முழுவதும் பேசிக் கொண்டே நின்றனர்.
விடிந்தது, மழையும் நின்றது
மூவரும் விடைபெற்று, அவரவர் ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.
*இன்றைய செய்திகள்*
*21.12.2023*
*மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
*தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
*கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்றான பம்பை நதியில் தொடர்ந்து கலக்கும் கழிவு நீரால் தூய்மையை இழக்கிறது.
*அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.... மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல்.
*எம்பிக்கள் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்; ஜனாதிபதி வலியுறுத்தல்.
*முகமது ஷமி, வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது.
*Today's Headlines*
*Former Union Minister Narendra Singh Tomar has been elected as the Speaker of the Madhya Pradesh Assembly.
*Schools and colleges in Tuticorin and Nellai have a holiday today.
*One of the rivers of Kerala State, Pumbai River loses its purity due to continuous mixing of waste water.
*Increasing new type of Corona.... Union Minister's warning information.
*MPs should conduct themselves in a dignified manner; President's Assertion.
*Arjuna Award to 26 people including Mohammad Shami and Vaishali.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.