*தினமும் ஒரு குட்டி கதை*
*நாயும் அதன் நிழலும் - ஈசாப் நீதிக் கதைகள்.*
முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.
செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.
செல்லும் வழியில் ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.
அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.
அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.
அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.
நீதி: *.பேராசை பெரு நஷ்டம்*.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.