2023-24 - பருவம் -2 -- வகுப்பு 1 ,2 ,3 பாடக்குறிப்பு எழுதுவதில் சில தகவல்கள் - ஒரு வாரத்தில் 7 / 8 செயல்பாடுகள் நடத்தி முடிப்பது எண்ணும் எழுத்து திட்டத்தில் தவறான முறையாகும்


👉2 ம் பருவத்திற்கு மொத்தம்  - 9 வாரங்கள்    



👉தமிழ்  - 6 பாடம் -  38 கற்பித்தல் பாடவேளைகள் 

 ( 8 வாரம் நடத்த வேண்டும்  )   


👉ஆங்கிலம் - 6 பாடம் - 38 கற்பித்தல்  பாடவேளைகள்

 ( 7 வாரம் நடத்த வேண்டும் ) 


👉கணக்கு   - 6 பாடம் - 25 கற்பித்தல் பாடவேளைகள் 

 ( 6  வாரம் நடத்த வேண்டும் ) 


👉 ஒரு வாரத்தின் கடைசி  கடைசி நாள்  இது நம்ம நேரம் (Its our time)  என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .  செயல்பாடுகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை 


👉அதன் படி வாரத்தின் இறுதி நாள் மாணவர்கள் முடிக்காத பயிற்சிகளை முடிப்பதற்கும் , ஆசிரியர் முடிக்காத பயிற்சிகளை முடிக்கவும் , மெதுவாக கற்போர் , மீத்திறன் மிக்க  மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கலாம் 


👉ஆனால் வாரத்திற்கு ஒரு பாடம் என  எழுதுவது தவறான முறையாகும் 


👉4 ,5  வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு  3/4/5 செயல்பாடுகள் மட்டுமே உள்ளது . வாரத்திற்கு ஒரு பாடம் என  எழுதுவது சரியாக வரும் .


👉 ஆனால் 1,2,3 வகுப்புகளுக்கு சில பாடங்களில் 6 /7 /8 செயல்பாடுகள் உள்ளன . எனவே அந்த பாடங்களை (-1பகுதி  / பகுதி-2) என  எழுதுவதுதான் சரியான முறையாகும் . 


👉 எளிதான ஒரு சில செயல்பாடுகளை இணைத்து ஒருநாளில் முடிக்கலாம் . 


👉 ஆனால்  ஒரு வாரத்தில் 7 / 8  செயல்பாடுகள் நடத்தி முடிப்பது எண்ணும் எழுத்து  திட்டத்தில்  தவறான முறையாகும்  . 




Post a Comment

0 Comments