தினம் ஒரு கதை - வாழ்வின் முடிச்சுகள்...

வாழ்வின் முடிச்சுகள்...


காலை நேரம் !


சீடர்கள் எல்லாம் காத்துக்கிட்டிருக்காங்க... புத்தர் வர்றார்... அவங்க முன்னாடி பேசறதுக்காக !


வரும்பொழுது கையிலே ஒரு துணியை எடுத்துக்கிட்டு வர்றார். 


மேடையில் அமர்ந்தார்.


எதுவும் பேசாமே அந்த துணியில முடிச்சுகள் போட ஆரம்பித்தார்.

சீடர்களுக்கு ஒண்ணும்  புரியலே...


என்ன இது, வழக்கமா பேசுவார்.. இப்போ வேற ஏதோ பண்ணிகிட்டிருக்காரே..ன்னு பார்த்தாங்க.


புத்தர் தலை நிமிர்ல... அவர்பாட்டுக்கு முடிச்சுகள் போட்டுகிட்டே இருந்தார்.


சில முடிச்சுகள் போட்டதுகப்பறோம் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தார்.


சீடர்களே இப்போ நான் போட்ட முடிச்ச அவிழ்க்கப்போறேன்... அதுக்கு முன்னாடி உங்க கிட்டே ரெண்டு கேள்வி கேக்கப் போறேன்.


முதல் கேள்வி :


முன்னாடி நான் வைத்திருந்த துணியும் இந்த முடிச்சுகள் போட்ட துணியும் ஒன்றுதான?


உடனே சீடன் ஒருவன் எழுந்தான்


“குருவே ! ஒரு வகையில் எல்லாம் ஒன்றுதான்.. அதில் முடிச்சுகள் மட்டும் தான் வித்தியாசம்”- அவ்வளவுதான்.         


முன்னாடி இருந்த துணி சுதந்திரமுடையது.

முடிச்சுகள் விழுந்ததும் சுதந்திரம் போயிட்டது.- இப்போ அந்த துணி அடிமைப்பட்டுக்கிடக்கு- அப்படின்னான்.


ஆமாம் நீ சொல்வது சரிதான்.


அதுபோல தான் “எல்லாருமே இயல்பிலே கடவுள்கள் தான்!

ஆனா முடிச்சு போட்டுக்கிட்டு சிக்கல்லே மாட்டிக்கிட்டு அடிமைப்பட்டு போயிடறாங்க... இந்த துணியில் விழுந்த முடிச்சுகள் மாதிரி... இதைத் தான் நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்பினேன் !”- ன்னார்.


சிறிது நேரம் கழித்து அடுத்த கேள்வி:


இந்த முடிச்சுகளை அவிழ்க்கணும்னா என்ன செய்யணும்?-ன்னு கேட்டார்.


இன்னொரு சீடன் எழுந்தான் 


“குருவே அதை அவிழ்க்கணும்னா முடிச்சுகள் எப்படி போடப்பட்டது என்று தெரிஞ்சுக்கணும் அது தெரியாத வரை அதை அவிழ்க்க முடியாது.

முடிச்சு போட்ட முறை தெரிந்தா அதை அவிழ்க்கறது சுலபம். 


புத்தர் நிமிர்ந்து ... நீ சொன்னது சரிதான்..


அதுதான் வாழ்க்கை... வாழ்க்கையின் சிக்கல்..!


இதோட விளக்கம் என்னன்னா...


கணியன் பூங்குன்றனார் சொன்னாரே... ”தீதும் நன்றும் பிறர் தரவாரா!” அதுதான்.


நம்முடைய சிக்கலுக்கு நாமதான் காரணம்.   


நம்மை அறியாமே.. விழிப்புணர்ச்சி இல்லாமே நாம போட்டுக்கிற முடிச்சுகள்லே சிக்கி.. சிக்கலே அவிழ்க்க முடியாமே திணறிக்கிட்டு இருக்கிறோம் நாம்!.   


இதுதான் இன்னைக்கு உலகத்துல நடந்துகிட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments