தினம் ஒரு கதை - இயற்கையின் படைப்பு.....

இயற்கையின் படைப்பு.....

காட்டில் இருந்த ஒரு மான் தண்ணீர் குடிப்பதற்காக, தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகேச் சென்றது.

அந்த மான் தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.

தனக்கு இயற்கை அளித்துள்ள அழகான உருவத்தையும், உடலிலிருக்கும் புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.

அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.

என்னை இவ்வளவு அழகாகப் படைத்த இறைவன், கால்களை இப்படிப் படைத்துவிட்டானே என வருந்தியது.

அப்போது ஒரு சிங்கம் அந்தப் பக்கமாக வந்தது.

அந்தச் சிங்கம், அந்த மானை அடித்துச் சாப்பிட்டுவிடலாம் என்று எண்ணியபடி, மானை நோக்கிப் பாய்ந்தது.

அதனை அறிந்த மான் அங்கிருந்து, நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடித் தப்பியது.

அப்போது அந்த மான் நினைத்தது, நல்லவேளை, சிங்கத்திடமிருந்து தப்பித்தேன். ஆண்டவன் தனக்கு இப்படிப்பட்ட கால்களைக் கொடுக்கவில்லை என்றால் இப்படி வேகமாக ஓடி வந்திருக்க முடியாது என்றபடி கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.

இயற்கையின் படைப்பில் எதுவாயினும், அதில் காரணமில்லாமல் இல்லை.

*****

Post a Comment

0 Comments