தினம் ஒரு கதை - ஆணவம் அழிவைத்தரும்

*''நான், என்ற #ஆணவம்_உன்னை_அழித்து_விடும்

''நான்'' என்பது அகந்தை மிகையாகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான், எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது...

அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது...

நான்!, என்று உச்சரிக்கும்போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்...

ஆற்றங்கரை ஓரத்தில் ஓங்கி வளர்ந்து இருந்தது ஒரு அரச மரம், அந்த மரம் மிகவும் உயரமாகவும், மிகுந்த வலிமையுடனும் இருந்தது. ஆனால்!, அதற்கு 'தான்' என்ற அகந்தை அதிகம்...

புயலே அடித்தாலும் கூட என்னை ஒன்றும் செய்யாது என்றும், நான் யாருக்கும் தலை வணங்க மாட்டேன் என்றும் அகந்தையுடன் இருந்தது...

அந்த அரச மரம் அருகில் நாணல் புற்களும் வளர்ந்திருந்தது. அந்த நாணல் புற்களை அடிக்கடி கேலி செய்தும் வந்தது அந்த மரம். ஆனால்!, நாணல் புற்களோ எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தது...

ஒருமுறை புயல் காற்று மிக வேகமாக சுழன்று சுழன்று அடித்தது. அதன் வேகம் தாங்காமல் அரச மரம் வேரோடு கீழே சாய்ந்து விழுந்தது...

ஆனால்!, நாணலோ காற்றுக்கு வளைந்து கொடுத்து, கீழே சாய்ந்து விடாமல் தன்னை காத்துக்கொண்டது...

கீழே கிடந்த அரச மரத்திற்கு ஒரே வியப்பு. இவ்வளவு பெரிய ஆளான நானே கீழே விழுந்து கிடக்க, இந்த சின்னஞ் சிறிய நாணல் எப்படி எந்தவித பாதிப்பும் இன்றி அப்படியே நின்று கொண்டு இருக்கிறது என்று வியப்பாகக் கண்டது..

தன் அய்யப்பாடுகளை நாணலிடமே கேட்டது,

அதற்கு அந்த நாணல், ''அரச மரமே! நீ ஆணவத்துடன் புயலோடு எதிர்த்து நின்றாய், நானோ பணிவுடன் புயலுக்கு தலை வணங்கி வளைந்து கொடுத்தேன் என்றது...

*ஆம் நண்பர்களே...!*

⚫ *நான் இல்லை என்றால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் ஓர் செருக்கு/ஆணவம், அது மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தால் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்...!*

Post a Comment

0 Comments