ஒரு நல்ல கதை
ஒரு பக்தர் இறைவனிடம் வரங்கள் வேண்டி ஒற்றைக்காலில் தவம் இருக்கிறார்
இறைவனோ அவசர வேலையாக உடனடியாக வருகிறார்
சீக்கிரம் சொல்லுப்பா
உனக்கு என்ன வரம் வேண்டும்
ஐயையோ
ஆண்டவா இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே
இன்னும் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்கு தீர்மானிக்கவில்லை என்று சொன்னாராம்
உடனே ஆண்டவன் எனக்கு காத்திருக்க நேரமில்லை
உடனே உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன்
அதை மூன்று தேங்காய்கள் ஆக தருகிறேன்
உனக்கு எப்பொழுது ஐடியா வருகிறதோ அந்த ஆசையை தேங்காயை உருட்டி உருட்டி நிறைவேற்றிக் கொள் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்
இருந்தாலும் அவர் உடனடியாக அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று யோசித்தார்
அவருக்கு மூக்கு சப்பையாக இருக்கிறது என்று
நீண்ட நாட்கள் வருத்தம்
அதனால் ஒரு தேங்காயை உருட்டி இந்த மூக்கை நீளமாக பார்க்கவேண்டும்
என்று கேட்டார்
உடனே அது மிக மிக நீண்டு விட்டது உடனே அசிங்கமாக போய்விட்டது
ஆத்திரத்தில் உடனடியாக மூக்கை குறைக்க வேண்டும் என்று இரண்டாவதாக கூறுகிறார்
மூக்கு மிகமிகச் சப்பையாக உள்ளேயே போய்விட்டது
அவமானம் தாங்காமல் எனக்கு உள்ளபடி மூக்கையே கொடு மூக்கையே கொடு என்று வேண்டிக்கொண்டு மூன்றாவது தேங்காயை உருட்டி விட்டார்
அவ்வளவு தான் எல்லா வரங்களும் காலி
இதுதான் இயல்பான வாழ்க்கை
வாழ்க்கை நமக்கு மூன்று வரங்களை தருகிறது
பேராசையால் ஆசைப்பட்டு துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம்
பிறகு அந்த துன்பங்களை சரிக்கட்ட பெரிய துன்பத்தில் மாட்டிக் கொள்கிறோம்
எல்லாம் முடிந்த பிறகு இயல்பான வாழ்க்கையே போதும் என்ற இறுதி புத்திக்கு வருகிறோம்
இதுதான் நிதர்சனமான உண்மை இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தைத் தேடி
இருப்பதை கொண்டு
சிறப்புடன் வாழும் வழியில் நடப்போம் 🙏🙏🙏
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.