தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்து, தொடர்ந்து பணிபுரிந்து வரும் பணியாளர்கள், தங்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த வகையில் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் 98 பேரை முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிலை-2 ரூ.4,100 - ரூ.12,500 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய ஆணை வழங்க வேண்டும் என்று அரசை ஆதிதிராவிடர் நல இயக்குனர் கேட்டுக்கொண்டார். இதை பரிசீலித்த தமிழக அரசு, 98 தூய்மை பணியாளர்களை முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றியும், அதற்காக ரூ.39.91 லட்சத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிட்டுள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.