11ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை 15.09.2023 ம் தேதி காலாண்டு தேர்வு துவங்குகிறது..
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இம்மாதம் காலண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19.09.2023 அன்று தேர்வுகள் தொடங்கி 27.09.2023 அன்று வரை நடைபெற உள்ளது.
11ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15.09.2023 ம் தேதி தொடங்கும் தேர்வுகள் 27.09.2023 தேதி வரை நடைபெற உள்ளது. காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து பள்ளிகளிலும் வினா தாள்களை பள்ளி நிர்வாகம் பதிவிறக்கம் செய்வது மற்றும் தேர்வு நடத்துவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
என்கிற இணையதளத்தை பயன்படுத்தி வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வுக்கு முதல்நாள் மதியம் 2 மணிக்கு மேல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகளோ சிக்கலோ இருந்தால் 14417 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் பருவ தேர்வு-2023
(6,7,8 வகுப்பு )
*19.09.23 தமிழ்*
*21.09.23 ஆங்கிலம்*
*25.09.23 கணிதம்*
*26.09.23 அறிவியல்*
*27.09.23 சமூகவியல்*
*6,7&8 மூன்று வகுப்புகளுக்கும்*
*காலையில் தேர்வு.*
*வினாத்தாள் முதல்நாள் மதியம் பதிவிறக்கம் செய்து நடத்த வேண்டும்.*
Time table
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.