ஆசிரியர்களை நோகடிக்காதீர்கள் - TETOJAC சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள சிரமங்கள் குறித்து SCERT இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் (Requests made on behalf of TETOJAC to SCERT Director and Joint Director regarding difficulties in Ennum Ezhuthum Scheme)...

TETOJAC சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள சிரமங்கள் குறித்து SCERT இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் (Requests made on behalf of TETOJAC to SCERT Director and Joint Director regarding difficulties in Ennum Ezhuthum Scheme)...

TETOJAC சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள சிரமங்கள் குறித்து SCERT இயக்குனர் திருமதி லதா அவர்களிடமும், இணை இயக்குனர் திருமதி ஸ்ரீதேவி அவர்களிடம் எடுத்துக் கூறி அதில் உள்ள சிரமங்களை குறைக்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வாரம்தோறும் TNSED செயலியில் மதிப்பீடு செய்வது  இனி மாதத்திற்கு இருமுறை என மாற்றுவதற்கு பரிந்துரை செய்வதாகவும்,

ஒன்று முதல் மூன்று வகுப்பு மற்றும் நான்கு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உரிய சி ஆர் சி கூட்டம் இனி ஒரே சனிக்கிழமையில் நடத்தவும்,

CRC பயிற்சியில் இரு ஆசிரியர்களை ஏதுவாளராக பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் ஒரு ஆசிரியர் ஏதுவாளராக பயன்படுத்த முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு விரைவில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் டேப் வழங்கப்படும் என நம்பிக்கை அளித்தார். ஆசிரியர்களின் கஷ்டத்தை மிகவும் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments