EMIS குறித்தான நமது கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும்


EMIS மற்றும் TNSED App குறித்து ஆசிரியர்களிடையே நிலவும் அதிருப்தியை தெரிவித்தோம் .அதற்கு அவர் EMIS என்பது தவிர்க்க இயலாதது . நாம் e governance முறைக்கு மாற வேண்டும் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை இது என்றும் இது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். மேலும் EMIS App  வாயிலாக ஆசிரியர்களின் வேலைப்பளு குறைக்கப்படும் , மாதாந்திர அறிக்கை Pay Bill, Aquittance , மதிப்பெண் பட்டியல்கள், இலவச சீருடை, புத்தகம், நோட்டு வழங்கியபட்டியல் போன்றவைகள் இனி எமிஸ் இணையதளம் வாயிலாகவே தயாரித்துக் கொள்ளலாம் என்றும் அதற்காக தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டி வராது என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆசிரியர்களும் TNSED App  மூலம் தனக்கு தேவையான விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் விடுமுறை கடிதங்களை கொடுத்துவிட்டு அது ஒப்புதல் பெறப்படுமா அல்லது பெறப்படாதா என்று வட்டாரக்கல்வி அலுவலர், அல்லது தலைமை ஆசிரியர்களிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி ஆசிரியர்களுக்கான பணிப்பலுவை குறைப்பதற்காக இந்த ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்

அப்பொழுது ஆசிரியர்களுக்கு பல இடங்களில் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் conficaration  குறைவாக இருப்பதால் அட்டெண்டன்ஸ் போடுவதிலும் இன்டர்நெட் கிடைப்பதிலும் சிரமமாக இருக்கிறது எனவே கல்வித் துறையே உயர்தர conficaration (6gb ram ,128 gb inbuilt memery)கொண்ட செல்போன் வழங்கி அதற்கு சிம் வழங்கி அந்த சிம்மில் இன்டர்நெட் கனெக்சன்  மற்றும்  டேட்டா ஆகியவற்றை துறைசார்பாக  வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் .மேலும் அவ்வாறு வழங்கும்பொழுது அதை கல்வித்துறைப்பணிக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தாத வகையில் லாக் செய்து (தனியார் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு லேப்டாப் வழங்கும் பொழுது அவர்கள் பணியைத் தவிர வேறு எந்த பணியும் செய்ய இயலாததை போன்று) வழங்குங்கள் அல்லது இன்டர்நெட் மற்றும் டேட்டா இணைப்புடன் கூடிய சிம்கார்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்


 இது சார்பாக நிதி துறை அலுவலர்கலுடன் பேசி வருவதாகவும் டிவைஸ் வழங்குவதா அல்லது டேட்டா வித் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு வழங்குவதா என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக ஆணையாளர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார் 

தகவல் கே.பி.ரக்ஷித்,மாநிலத்தலைவர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


Post a Comment

0 Comments