தமிழக அரசின் மாணவர் விரோத ஆசிரியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்   மாநில மைய முடிவின்படி,  தமிழ்நாடு அரசின் மாணவர் விரோத, ஆசிரியர் விரோத, கல்வி விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையிலும் 6- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30.08.2023 புதன்கிழமை மாலை  5.00 மணியளவில், தமிழ்நாட்டின்  அனைத்து தொடக்கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு  "தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  

 *🔥கோரிக்கைகள்🔥* 
================

*(1)தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிடுக!*

*(2)எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் SCERT இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெறுக!* 

*(3)தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிடுக!*

*(4)EMIS இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்காதே!*

*(5) காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துக!*

*(6)காலை உணவுத் திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிடுக!*

 👆மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி TNPTF சார்பாக  "தன்னெழுச்சி   ஆர்ப்பாட்டம்" இன்று  தமிழகம்  முழுவதும் கல்வித் துறை அலுவலகங்கள் முன்பு நடைபெறுகிறது 

Post a Comment

0 Comments