விஞ்ஞானிகள் ஒரு சில எலிகளை கூண்டில்அடைத்து வைத்து வளர்த்து ஆய்வு செய்தார்கள்.
ஒரு கூண்டில் உணவு மட்டுமல்லாமல் அந்த எலிகள் ஓடி ஆடி விளையாட ஊஞ்சல்களையும் அமைத்தார்கள்.
அது மட்டுமல்லாமல் ஏணிகள் ஓடும் சக்கரங்கள் மற்றும் சிறு பந்துகளையும் வைத்தார்கள்.
இந்தக் கூண்டில் வாழ்ந்த எலிகள் நல்ல உணவுகளை சாப்பிட்டன. மட்டும் அல்லாமல் நன்றாகவும் விளையாடின.
இந்தக் கூண்டுக்கு பக்கத்துக் கூண்டில் இன்னும் சில எலிகள் வளர்க்கப்பட்டன.
அவைகளுக்கு வெறும் சாப்பாடு மட்டுமே வைக்கப்பட்டது. விளையாடுவதற்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்களும் வைக்கப்படவில்லை.
இந்த எலிகள் அனைத்தும் வேளா வேளைக்கு சாப்பிட்டு கொழுத்து வந்தன.
உணவோடு சேர்த்து விளையாடிய எலிகள் அனைத்தும் மூன்று வருடங்கள் உயிர் வாழ்ந்தன. இவை மனித உயிர் வாழ்வில் 90 வருடங்களுக்கு சமம்.
வெறும் உணவை மட்டும் சாப்பிட்ட எலிகள் கொஞ்ச காலத்தில் இறந்து விட்டன.
ஓடி ஆடி விளையாடிய எலிகளில் நியூரான்கள் அதிகமாக இருந்ததுடன் அவற்றின் மூளைகளும் பெரிதாக இருந்தன.
வெறும் உணவை மட்டும் சாப்பிட்ட எலிகளில் நியூரான்கள் குறைவாக இருந்ததுடன் மூளையும் அளவில் சிறியதாக இருந்தது.
ஆக்கபூர்வமான எண்ணங்களும் மூளைக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகளும் ஏற்படுத்தப்பட்டால் மூளையின் உபயோகம் பன்மடங்கு உயர்ந்து பல ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.