பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் ஆகியோரின் குழந்தைகள் அப்பள்ளியில் பயிலாத நிலையில் அவர்கள் தங்களது பதவிகளில் தொடர இயலாது ....
காலியாக உள்ள தலைவர், துணைத் தலைவர் ,உறுப்பினர் போன்ற இடங்களை வேறு யாரையும் கொண்டு நிரப்புதல் கூடாது. பதவிக்காலம் முடியும் வரை அது காலிப் பணியிடமாகவே தொடரும் ....
தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில் துணை தலைவரும் .....துணைத் தலைவர் மற்றும் தலைவர் பதவி காலியாக இருக்கும் சூழ்நிலையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி ஏற்கனவே இருக்கக்கூடிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் நிதி பரிமாற்றங்களை செய்ய தகுதி உடையவர் ஆகிறார் .....
தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடாது ......
மேலும் இப்பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் வேறு பள்ளியில் பயில்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து தீர்மான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் ......
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.