கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும், என்றும் சொல்கிறோம் , கோபத்தின் ஆரம்பம் பைத்தியம் முடிவு வருத்தம் என்றும் சொல்ல கேட்கிறோம்.
கோபம் கொள்ளலாமா ? இல்லையா ?
பலவீனம் ,ஏமாற்றம், அதிகாரம்,மதிப்பின்மை போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பொறி மூளையில் உள்ள Amygdala பகுதியை தூண்ட அதனால் இரசாயன மற்றும் நரம்புகளை கட்டுபடுத்தும் மூளையின் hypothalamus செயல்பட தொடங்கிவிடும்.
கண்கள் சிவக்கும், பல்லு நற நறக்கும் பேச்சு உச்சஸ்தாயில் நிற்கும் அதைவிட இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் எக்கச்சக்கமாக கூடி கை முறுக்கும் அளவிற்கு போய்விடுகிறது.
கோபத்தினால் இழப்புகள் தான் அனுகூலம் என்றும் இல்லை என்பது எனது சொந்த அனுபவம். கோபத்தின் வீரியம் ஆளுக்காள் சுரக்கும் ஹார்மோனின் அளவு , தங்களுக்கு என்று அவர்கள் வைத்திருக்கும் வரையறைகளை பொறுத்து வேறுபடும்.
மனிதனுக்கு இயற்கையில் உருவான உணர்வுகளில் ஒன்றான கோபம் , எனவே எல்லோருக்கும் விரும்பியோ விரும்பாமல் இருக்கும் .
மற்ற உணர்வுகளைப்போல் எவ்வாறு அதை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பது தான் வெற்றி.
நீங்கள் கோபத்தை அடக்குவதென்று சொல்வது அதைப் பேச்சிலோ நடத்தையிலோ காட்டாமல் இருப்பது பற்றித் தான்.
முக்கியமாக கோபம் வரும் போது நிதானம் தேவை, ஒரு வேளை உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் உரத்து கதைப்பதாலும் தவறான வார்த்தை பிரயோகங்களாலும் உங்கள் நியாயம் மடிந்து போவது மட்டுமல்ல உங்கள் பற்றிய கண்ணோட்டமே வேறாகிவிடும்.
அதுவும் நெருக்கமானவர்களிடம் என்றால் தக்காளி சட்னி தான்.
சரி ஒரு குட்டிக்கதை
விமானத்தில் நிறை அளவு செய்து பொதிகளை இடும் பணியில் இருந்த நபரோடு பயணி ஒருவர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
நேற்று முளைத்த காளான் நீ எனது அதிகாரம் , பணபலம் பற்றி தெரியாமல் பேசுகிறாயா என தொடங்கி பின்னர் ஒருமையிலும் தகாத வார்தைகளாலும் பயணி வசை பாட தொடங்கிவிட்டார்.
ஏற்க்குறைய சிவந்த கண்களில் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியும் விஜயகாந்த் நிலைக்கே சென்று விட்டார்.
அனால் அந்த பணியாளரோ அமைதியாகவும் பொறுமையாகவும் , புன்முறுவலுடன் தன்னால் இயன்றதை செய்து தருகிறேன்,என்று தன்மையாக கூறினார்.
பயணி தன்பின்னால் நின்றவர்களுக்கு பணியாளரைப்பற்றியும் அந்த நிறுவனத்தை பற்றியும் ஏளனமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.
எனது முறை வந்த போது அந்த பணியாளரை பார்த்து கேட்டேன் . இவ்வளவு அவமான பேச்சுகளை கேட்டும் எவ்வாறு உங்களுக்கு ஒரு துளி கோபமும் வரவில்லை எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது என்றேன்.
நான் என்ன முட்டாளா ? எனது நாளை அந்த பயணிக்காக விரயமாக்குவத்ற்கு,
அவர் தனது பிரயாணத்தை பிரச்சனை ஏதும் இன்றி தான் போக வேண்டிய நாட்டுக்கு போய் சேர்ந்து விடுவார் ஆனால் அவரது பொதிகள் இடையில் விமானம் transit க்கு தரையிறங்கும் நாடு வரை தான் போய் சேரும்.
என்னால் இயன்றதை செய்து கொடுத்துள்ளேன்
என்று கூறி சிரித்தார்.
(தென்காசி சுவாமிநாதன்)
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.