மேலும், ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றும், ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பயனாளர்களுக்கு உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார். சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி கூட்ட நெரிசலை தடுக்க வேண்டும் எனவும், இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் என்னென்ன என்று பார்க்கலாம்:
* 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
* ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே
* உச்ச வயது எதுவும் இல்லை
* இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உண்டு.
* இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு
* நியாய விலைக் கடை அட்டை எந்த கடையில் உள்ளதோ, அந்த கடையில் விண்ணப்பிக்க வேண்டும்
* பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை கிடைக்காது
* பெண் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது
* ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
* சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
* ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
* ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
அத்துடன், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயனாளர்களின் ஆதார் எண் கணக்கெடுக்கப்பட்டு ஒரே பயனாளி இரண்டு முறை பலன் அடையாத வகையில் பார்த்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.