CRC பயிற்சிகள் CPD பயிற்சிகளாக மாற்றப்பட்டதை வெறும் பெயர் மாற்றமாக மட்டுமே இருக்கும் என்று ஆசிரியர்கள் பலரும் கடந்து செல்கிறார்கள்.
"இதனால் டீ, வடைக்கு ஒன்றும் ஆபத்தில்லையே" என்றெல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
காலையில் நானும் இப்படித்தான் நினைத்திருந்தேன்.
இருப்பினும் NEP 2019ல் CPD பற்றி அப்படி என்னதான் இருக்கிறது என்று வாசித்து பார்த்தால் இது வெறும் பெயர் மாற்றமாக மட்டும் தெரியவில்லை.
NEP 2019ன் படி, CPD என்பது,
1) ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும்.
2) இந்த பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும்.
3) இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான RANK வழங்கப்படும்.
4) Early Teacher (without tenure), Early Teacher (with
tenure), Proficient Teacher, Expert Teacher, and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள்.
5) ஆசிரியர்கள் பெறும் தரமதிப்பீட்டின்படி ஊதிய உயர்வு, பதவி உயர்வு இருக்கும்.
6) தமிழ்நாடு அரசு இதுவரை Seniority Based Salary Increment மற்றும் Seniority Based Promotion என்பதைத்தான் பின்பற்றி வருகிறது. ஆனால் இதில் Merit Based Salary Increment மற்றும் Merit Based Promotion என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
7).தற்போது ஓடிக்கொண்டிருக்கும் TET தேர்ச்சி பிரச்சனையும் இதன் சாராம்சமாகவே பார்க்கப்படுவதாக மூத்த ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் . (இந்த நிகழ்வுகளுக்கு ஆசிரியர்களை மனதளவில் தயார் செய்தல்.)
இந்தவகையில் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, இதன் உள்ளடக்கமும் மாறியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் இதை கவனமுடன் அணுக வேண்டும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.