*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு*
*நாள்: 13-06-2023*
*கிழமை: செவ்வாய்க்கிழமை* ________________________________
*திருக்குறள்*
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பயனில சொல்லாமை
*குறள் : 193*
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
விளக்கம்:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.ஒரு
*பழமொழி :*
சொல்வதை விட செய்வதே மேல்.
Example is better than precept
*இரண்டொழுக்கப் பண்புகள் :*
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும்.
- மால்கம் ஃபோர்ப்ஸ்
*பொது அறிவு :*
1. கடல்களின் எஜமானி என்று அழைக்கப்படும் நாடு எது?
இங்கிலாந்து.
2. காவல்துறையில் முதன் முதலில் பெண்களை சேர்த்த நாடு எது?
பிரிட்டன்
*English words & meanings :*
Ability - talent திறமை.
Abode - a living place வசிக்கும் இடம்
*ஆரோக்கிய வாழ்வு :*
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.
ஜூன் 14
*சே குவேரா அவர்களின் பிறந்தநாள்*
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
*June 14 - World Blood donor day*
*ஜூன் 14 - உலக ரத்ததானம் அளிப்பவர் தினம்*
உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்
*நீதிக்கதை*
பதினைந்து வயது சிறுவன் அவன். ஒரு மோசமான விபத்தில் தனது இடது கையை இழந்துவிட்டான். ஆனாலும் ஊனத்தை மீறி, எதை யாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் அவனுக்குள் எழுந்தது. அந்தப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு ஜூடோ குரு இருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அவரும் புன்சிரிப்போடு அவனைப் பயிற்சியில் சேர்த்துக்கொண்டார். "இதுதான் உன்னுடைய முதல் பாடம்' என்று சொல்லி, ஒரு தாக்குதல் முறையைச் சொல்லிக் கொடுத்தார். மூன்று மாதங்கள் கடந்தன. அடுத்து..? குருவிடமே கேட்டான். “இந்த ஒரே வித் தையை முழுசாகக் கற்றுக்கொள்!" என்றார் குரு.
சில மாதங்களில் குரு இவனை ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு ரவுண்டுகளில் எதிராளிகளை சுலபமாக வீழ்த்தினான் சிறு வன். அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. மூன்றாவது சுற்றில் புகழ்பெற்ற இன்னொரு வீரனோடு அவன் மோத நேர்ந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் அடி வாங்கினாலும், அவன்தான் ஜெயித்தான்.
இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற ஒரு வீரனை சிறுவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மோசமாக அடி வாங்கி சிறுவன் செத்துவிடுவானோ' என்ற பயத்தில் நடுவரே சிறுவனை விலகிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் குரு, 'விடுங்கள்... அவன் ஜெயிப்பான்" என்றார். போட்டி ஆரம்பித்தது. ஒரு கையில்லாத சிறுவன்தானே என்று அந்த புகழ்பெற்ற வீரன் அலட்சியம் காட்ட, தன் வழக்கமான தாக்குதலில் அவனையும் வீழ்த்தினான் சிறுவன்.
கோப்பையோடு திரும்பும்போது சிறுவன் கேட்டாள்... "ஒரே ஒரு தாக் குதலை மட்டும் கற்றுவைத்திருக்கும் நான் எப்படி ஜெயித்தேன்?"
குரு சிரித்தபடி சொன்னார். “இரண்டு காரணங்கள்... ஒன்று, ஜூடோ விலேயே மிகக் கஷ்டமான ஒரு தாக்குதலை நீ நன்றாகக் கற்றிருந்தாய். இன்னொன்று, இப்படி நீ தாக்கினால் எதிராளி உன்னை மடக்க, உன் இடது கையைத்தான் வளைக்க வேண்டும்: அது உனக்கு இல்லை!"
பலவீனங்களையே பலமாக்கிக் கொண்டால், வெற்றி நிச்சயம்
*இன்றைய செய்திகள்*
*14.06.2023*
*தேசிய மருத்துவ தகுதி தேர்வு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை
*சீன எல்லைக்கு அருகே 2.6 பில்லியன் மதிப்பில் சுபன்சிரி நீர்மின் திட்டப் பணியை இந்தியா தொடங்குகிறது.
*மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் -
தமிழ்நாடு அரசு
*வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்.
*இந்தோனேசியா ஓப்பன் பேட்மிட்டன் பி.வி. சிந்து பிரனோய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.
*TNPL நடப்பு சீசனின் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
*Today's Headlines*
*Chief Minister M.K.Stalin requested our Prime Minister Modi to quit the National Medical Eligibility Test
*India starts work on the Subansiri hydropower project worth 2.6 billion near the China border.
* Retired IPS officer Shakeel Akhtar appointed as State Chief Information Commissioner - Tamil Nadu Govt
* Vadachennai and Vallur thermal power stations have been repaired and 1100 MW power generation has started again.
* In Indonesian Open Badminton, P.V. Sindhu and Pranoi advanced to the second round.
* Coimbatore Kings beat Tirupur Tamilians by 70 runs in the first match of the current TNPL season.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.