எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்கள் இரண்டு பதிவேடுகள் பராமரித்தால் போதுமானது SA மதிப்பீடு 26.04.2023 வரை நீட்டிப்பு - TN EE Team



1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை கொண்டு நடத்தப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது (Only Optional) மட்டுமே.

மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு செயலியில் முடிவுற்ற பின்னர் அதற்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். 

அப்பட்டியலில் நீங்கள் மேற்கொண்ட வளரறி மதிப்பீடு அ, ஆ  மதிப்பெண்கள் இடம்பெறும்.

FA(A) முடித்தவர்கள் மீண்டும் ஒருமுறை record assessment click செய்து அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

தொகுத்தறி மதிப்பீடு முடிக்க தற்போது 26.04.2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட இரண்டு பதிவேடுகள் பராமரித்தால் போதுமானது.

1. Lesson Plan

2. Report Cards

முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் Report Cards யை இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் தற்போது செயலி மூலம்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments