NET (நெட்) தேர்வுக்கு விண்ணப்பிக்க 17 வரை அவகாசம் நீட்டிப்பு


'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவி பெறவும், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை, தேசிய தேர்வுகள் முகமை, ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்துகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு ஜூன் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு, கடந்த மார்ச், 10ல் துவங்கி ஏப்., 10ல் நிறைவு பெற்றது.

இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று, நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.,17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் csirnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.

இது குறித்த கூடுதல் விபரங்களை, https://nta.ac.in/ எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின், csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது, 011- - 4075 9000 / 011- - 6922 7700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments