*தினமும் ஒரு குட்டி கதை*
*நாவ்வடக்கும்*
*♻️நாக்கை அடக்கி ஆளக்கற்றுக் கொண்டால், உடலுக்கும் மனதுக்கும் நல்லது.*
*♻️"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும்.*
*♻️அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்.*
*♻️ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது.*
*♻️அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்து இருந்த துதிக்கையை நீட்டியது யானை.*
*♻️இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான்..*
*♻️அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன்,*
*'அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்து இருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்.*
*♻️அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்' என்று சொல்லி விட்டார்.*
*♻️மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும்.*
*♻️தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியம் இல்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்..*
*😎ஆம்.,நண்பர்களே..*
*🏵️நாக்கின் நீளம் மூன்று அங்குலம் தான்., ஆனால் அது ஆறடி மனிதனையும் கொன்று விடும”*
*⚽வெறுப்பிலும் கோபத்திலும் மகிழ்ச்சியில் கூட வார்த்தைகளை அளந்துபேசுங்கள்!*
*🏵️அது நமக்குத் திரும்பி வரும் போது எல்லாமே மாறி விடும்........*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.