தினமும் ஒரு குட்டி கதை - நேர்மறையாக சிந்தியுங்கள்..


*♻️துன்பங்களும், துயரமும் உங்களைத் துரத்துகிறதா அவற்றிற்கு எளிதாக தீர்வு காண முயல வேண்டுமே தவிர மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது..*

*♻️லண்டன் நகரத்தில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். அங்கு உள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளருவது போலவே அவை எல்லோருக்கும் பிடிக்கும்.*

*♻️ஆனால் இந்தப் பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு ரோஜாப்பூ அருகில் இருந்தாலே இவர் கண்களில் இருந்து கண்ணீர் வரும். தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.*

*அதனால் இவர் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் இருந்து இருந்தார்.*

*♻️இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.*

*♻️அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளிலில் நூற்றுக் கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.*

*♻️ஒரு பூ அருகில் இருந்தாலே இருக்க முடியாது. இப்போது இந்தக் கூட்டத்தில் இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி இறுதிவரை இருக்கப் போகின்றோம்' என்று பயந்தார்.*

*♻️ஆனால் வேறு வழி இல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார்.*

*♻️பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்ததோடு தும்மலும் வந்தது. முகமெல்லாம் சிவந்து விட்டது.*

*♻️கூட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்த ஒருவர் எழுந்து வெளியில் செல்கின்ற போது,*

*♻️'இந்த பூக்களைப் பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன' என்று வியந்தபடி கூறிக் கொண்டே சென்றார்.*

*♻️அப்பொழுது தான் இவருக்குத் தெரிந்தது. அந்தப் பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல, காகிதத்தில் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.*

*♻️'இந்தப் பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்' என இவர் நினைத்த விநாடியே அவருடைய அலர்ஜிக்கு உண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.*

*♻️இது தான் நம் மனதின் சக்தி! "ஒன்றை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அது நம்மை பாதிக்கும்.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️'வாழ்க்கை ரொம்பத் துயரமாக,துன்பமாக இருக்கு' என்று நீங்கள் நினைத்தீர்களானால், உங்களுக்கு வாழ்க்கையிலுள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சியான தருணங்கள் கூட உங்கள் கண்ணில் தெரியாது.*

*ஆனால்,*

*⚽அதே நீங்கள் 'வாழ்க்கை ரொம்ப ஆனந்தமாகப் போகுது' அப்படியென்று நினைத்தீர்களானால்,*

 *🏵️''உங்களுக்கு அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகள் கூட ஆனந்தமாகத் தெரியும்.*

*⚽அதனால் நீங்கள் கவலையான நேரங்களிலோ அல்லது மகிழ்ச்சியான நேரங்களிலோ எப்போதும் உங்கள் மனதை நேர்மறையாகவே வைத்திடுங்கள். அது தான் உங்களுக்குச் சிறந்தது.*

*🏵️ஆம், மனதில் நீங்கள் சாதாரணமாக நினைக்கும் எண்ணங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவை*

*⚽அதனால் நீங்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்து பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சுமூகமாக செல்லும்..*

Post a Comment

0 Comments