TNSED SCHOOLS APP இல், மீதமுள்ள விடுப்பு விபரங்களை கண்டுபிடித்து பதிவு செய்வது எப்படி? முழு விளக்கம் & விடுப்பு விதிகள் PDF download


விடுப்பு விவரங்கள்  பதிவு செய்ய வேண்டிய 
TNSED OLD APP LINK 

Go to TNSED OLD APP 
|
E- profile 
|
Leave management 
My leave 
Enter your balanced leaves 
👇👇👇👇


ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். கீழ்க்காணும் விபரங்களின்படி மீதமுள்ள விடுப்பு விவரங்களை TNSED Schools App இல் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்


*மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழுமையான நீண்ட விளக்கம்!!*

*முன்னரே, S.R. ஐ நகல் எடுத்து வைக்காதவர்கள் மட்டும், S.R. ஐ அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும். பள்ளியிலுள்ள ஆசிரியர் வருகைப் பதிவேடு, விடுப்புப் பதிவேடு ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும அனைத்தையும் ஒருசேர வைத்துக் கொள்வோம்.*

*குறிப்பு: S.R. இல் அனைத்து வகை விடுப்புகளும், pending இல்லாமல், இன்றைய தேதிப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக, S.R. update ஆக இல்லை எனும் பட்சத்தில், உண்மையான விடுப்பு விபரங்களை மட்டுமே App இல் பதிவு செய்ய வேண்டும். இங்கே S.R. இல் உள்ளதை மட்டும் அப்படியே பதிவு செய்தல் கூடாது.*

*பிறகு, தங்கள் Mobile இல் TNSED Schools App - ஐ Update செய்யவும்...*

*TNSED Schools App இல் உள்ளே சென்று, ஆசிரியர்கள் அவரவர் தனிப்பட்ட EMIS ID & Password கொண்டு, Individual login செய்யவும்*

*பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.*

*முதலாவதாக உள்ள My Profile இல், உள்ள விபரங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். One step back வந்து, இரண்டாவதாக உள்ள leave management ஐ கிளிக் செய்யவும்.*

*திரையில் My leaves என்ற option வரும். அதனுள் உள்ளே சென்றால் உங்கள் பெயர் மற்றும் ID இருக்கும்.*

*குறிப்பு: அனைத்து வகை leave கணக்கிலும் இன்றைய  தேதிப் படி எடுத்தது போக மீதமுள்ள  நாட்களை பதிவிடவும். சுருக்கமாக சொல்வதென்றால், இன்றைக்கு என்ன இருக்கிறதோ அதனை மட்டும் பதிவிடுங்கள். மாறாக, 01-01-2023 இன் படி என்று, எந்த விடுப்பையும் இங்கு பதிவிடக் கூடாது. ஏனென்றால் Future இல் App மூலம் நாம் Leave Apply செய்யும்போது, 01-01-2023 முதல் இன்று வரை, நாம் எடுத்திருந்த  விடுப்புகளை கணக்கில் கொள்ளாமல் பதிவிட்டிருப்போம். நமது Online Attendance, Offline Attendance, S.R. அனைத்தையும் தொடர்புபடுத்தினால் ஒற்றுமை வராது. ஒன்றுக்கொன்று Data Entry Mismatch ஆகி விடும்.*

*கீழ்க்காணும் தகவல்கள் யாவும், பல்வேறு மாவட்ட  ஆசிரியர்களின் Whatsapp குழுக்களில் பதிவிடப்பட்டு, உயர்மட்ட அலுவலர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் மூலம், கிடைத்த தகவலாகும்.*

*அதோடு YouTube videos, PDFs, மற்றும் இதர வளங்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களாகும்.*

*App இல், நாம் ஏதாவதொரு Entry Box ஐ தொட்டால், பின்வரும் நிபந்தனைகளைக் கூறி, நமது ஒப்புதலை கேட்கும்.*

Instructions

1.Please fill up leave balances as applicable.

2.Please refer to SR / Offline leave history before you update / verify balance here.

3.Upon submission the balance will be verified and updated in leave balance.

4. No editing will be possible once submitted.

I acknowledge that I have read and understood the above message

PROCEED

*அதாவது*

வழிமுறைகள்

 1.மீதமுள்ள விடுப்புகளை பொருத்தமானதில் நிரப்பவும்.

 2.இங்கே இருப்பை புதுப்பிக்க /சரிபார்ப்பதற்கு முன் S.R. / Trs Offline attendance பக்கங்களைப் பார்க்கவும்.

 3.நீங்கள் சமர்ப்பித்ததும் உங்களுடைய விடுப்பு இருப்பு, சரிபார்க்கப்பட்டு App இல், விடுப்பு இருப்பில் புதுப்பிக்கப்படும்.

 *4. ஒருமுறை சமர்ப்பித்தவுடன், பிறகு எந்த திருத்தமும் செய்யமுடியாது.*

 மேலே உள்ள செய்தியை நான் படித்து புரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

 தொடரவும்.,

என்று கேட்கும். அதன்படி தொடர்ந்தோம் எனில்.,

*தங்களின் மேலான கவனத்திற்கு*

*TNSED Schools App இல் உள்ளவாறே, இங்கே வரிசை எண்கள் Order மாறாமல் கொடுக்கப்பட்டிருக்கும்.*

*YEARLY LEAVES*

*1) முதலில், தற்செயல் விடுப்பு (CL)*

*இன்றைய தேதிப் படி, மீதம் உள்ள நாட்களை மட்டும் பதிவு செய்யவும்.*

*2) அடுத்து RL என்கிற  மதச் சார்பு விடுப்பு*

*மொத்தம் உள்ள 3 மதச்சார்பு விடுப்புகளில் இன்றைய தேதிப்படி, மீதம் உள்ள நாட்களை மட்டும் பதிவு செய்யவும்.*

*3) பிறகு "Compensatory Leave" என்ற option வரும். அதில், எத்தகைய தகவலையும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல (Non Teaching Staff). எனவே அக்கலத்தில் நாம் 0 என்று தான், பதிவு செய்ய வேண்டும்.*

*SERVICE LEAVE*

*ஆண், பெண் இருவருக்கும் பொதுவானவை👇👇👇*

*1) EL எவ்வளவு மீதம் (இருப்பு) உள்ளது என்பதை S.R. - ஐப் பார்த்து சரியாக குறித்துக் கொண்டு, பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.*

*கொரொனா காலங்களில் வருகின்ற EL நாட்களை, வழக்கம் போல, வருடத்திற்கு 17 நாட்கள் வீதம் கணக்கிட்டு, நாம் சேர்த்தே கணக்கிட்டுக் கொள்ளலாம்.*

*2) UEL on MC எனப்படும் மருத்துவ விடுப்பு*

*தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.*

*0-2 yrs                0 day*
*2-5 yrs              90 days*
*5-10 yrs         180 days*
*10-15 yrs       270 days*
*15-20 yrs       360 days*
*above 20 yrs  540 days*

*ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.*

*உதாரணத்திற்கு ஓர் ஆசிரியர் 10 வருடங்கள் 2 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதிக் காலம், 180 அல்ல, 270 நாட்கள் ஆகும். இங்கே அவருக்கு 15 வருடங்கள் முடிந்தால் தான் 270 நாள்கள் ML என்று கணக்கிடுவது தவறு. 10 ஆண்டுகள் முடிந்தாலே 270 நாள்கள் தான். இந்த formula மேலேயுள்ள அனைத்து ஐந்தாண்டிற்கும் பொருந்தும்.*

*ML என்பது பணிபுரிந்த ஒரு வருடத்திற்கு 18 நாள் என்ற அளவில்  கணக்கிடவும்.*

*ஒரு வருடத்திற்குண்டான 12 நாள் CL ஐ அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே அதாவது முன்கூட்டியே,  தொடர்ச்சியாக 10 நாட்கள் எடுப்பதில்லையா? அதுபோல, 11 -வது ஆண்டு ஆரம்பித்த முதல் நாள் முதலே, 10-15 yrs க்கு உண்டான  270 நாட்களை (முன்பு எடுத்தது போக மீதமுள்ள நாட்களை) தற்போதைய Medical Rules படி இடைவெளி விட்டு எடுக்கலாம. ஒருவேளை விடுப்பு தீர்ந்து விட்டால், 15 ஆம் ஆண்டு முடியும் வரை ML எடுக்க முடியாது.*

*7) EOL on loss of pay without M.C.*

*மருத்துவச் சான்று அல்லாமல் எடுக்க அனுமதிக்கப்படும் ஊதியமில்லா விடுப்பு நாள்களின் எண்ணிக்கை 5 yrs க்கு மேல் 360. இதில் நீங்கள் எடுத்த விடுப்பைப் கழித்து மீதம் உள்ள விடுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால்,  360 எனக் குறிப்பிட வேண்டும்*

*180 days if less than 5 years*

*360 days if more than 5 years*

*8) EOL On loss of pay with M.C.*

*மருத்துவச் சான்றின் பேரில் எடுக்கும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இதில் நீங்கள் எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 0 எனக் குறிப்பிட வேண்டும்..*

*9)  UEL on Private Affairs*

*இதில் அனுமதிக்கப்படும் அரைச்சம்பள விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 10 yrs க்கு மேல் 180. இந்த எண்ணிக்கையில் நீங்கள் எடுத்த அரைச்சம்பள விடுப்பு நாட்களை கழித்து மீதமுள்ள எண்ணிக்கையை பதிவிட வேண்டும்..*

*90 days if less than 10 years*

*180 days if more than 10 years*

*10) Special Casual Leave*

*விடுமுறை நாளில் பணிசெய்து அதனால் விடுப்பு எடுத்திருந்தால், 10 லிருந்து கழித்து மீதியை பதிவிடவும். இல்லையென்றால், இதில் 10 எனக் குறிப்பிட வேண்டும்..* 

*இங்கே கவனிக்கவும். Special CL இல்  0 அல்லது வேறு ஏதேனும் பதிவிடுங்கள் என்று பலரும், பல வழிமுறைகளை தங்களுக்கு தந்திருப்பார்கள். தவறில்லை, அனைவரது வழிமுறைகளையும் படித்துப் பாருங்கள், அவையனைத்திலிருந்தும் (lncluding Me) எந்த ஒன்றை சரியென தாங்கள் உணர்கிறீர்களே (உயர் அலுவலர்களின் ஒப்புதல்படி) அதனை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.*

*11) Special Disability Leave*

*இதில் விபத்து போன்ற காரணங்களினால் விடுப்பு எடுத்திருந்தால், 720 ல்  எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து குறிப்பிட வேண்டும்  எடுக்கவில்லை எனில் 720 எனக் குறிப்பிடவும்.*

*இங்கே கவனிக்கவும். 0 அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பதிவிடச் சொல்லியிருப்பார்கள். குழப்பம் வேண்டாம்.*

*பெண் ஆசிரியர்களுக்கு..*

*3) Maternity Leave*

*ஒரு குழந்தை இருப்பவராக இருந்து விடுப்பை எடுத்திருந்தால், மீதமுள்ள நாள்கள் 365 எனப் பதிவிட வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்து விடுப்பை எடுத்திருந்தால், மீதமுள்ள நாட்கள் 0 எனப் பதிவிட வேண்டும். விடுப்பு எடுக்கவில்லையெனில் 730 என்று பதிவிடவும்.*

*4) Leave for Adoption of Child*

*அதிகபட்சம் 270 நாள்களில், நீங்கள் எடுத்தது போக மீதமுள்ளதை பதிவிடவும். விடுப்பு எடுக்கவில்லையெனில் 270 எனப் பதிவிட வேண்டும்..*

*5) Abortion Leave..*

*42 நாட்கள் உண்டு. விடுப்பு எடுத்த நாள்களை கழித்துக் கொண்டு மீதியை  பதிவிட வேண்டும். இல்லையெனில் முழுமையாக 42 என பதிவிடலாம்..*

*6)  Leave on still born child birth..*

*தற்போது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்தால் 90  நாள்களில் மகப்பேறு விடுப்பு துய்த்துள்ள நாட்களை கழித்துக் கொண்டு மீதமுள்ள நாட்களைப் பதிவிட வேண்டும்.  இல்லை எனில்  90 எனப் பதிவிட வேண்டும்..*

*Yearly Leave இல் வரிசை எண் 1, 2, 3 இருபாலருக்கும் பொதுவானவை..*

*Service Leave இல் வரிசை எண் 1, 2, 7, 8, 9, 10, 11 ஆகியவை இருபாலருக்கும் பொதுவானவை..*

*Service Leave இல் வரிசை எண் 3, 4, 5, 6 ஆகியவை பெண்களுக்கு மட்டும் உரியவை..*

*மேற்காணும் Empty படிவத்தில், மீத விடுப்பு விபரங்களை பூர்த்தி செய்து, உயர்மட்ட அலுவலர்களிடமோ அல்லது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமோ காண்பித்து, சரி எனும் பட்சத்தில் App இல், மேற்காணும் வழிகளில் விபரங்களை உள்ளீடு செய்து*

*இறுதியாக,*

*Submit செய்ய வேண்டும். ஒரு முறை Submit செய்து விட்டால் மாற்ற இயலாது..*

*தலைமை ஆசிரியர்  ID வழியாக சென்று  Leave Sanction இல் Leave Balance இல் சென்று ஒரு முறை மாற்றம் செய்து கொள்ளலாம்.*

*தலைமை ஆசிரியர் Edit செய்த பிறகு அல்லது சரியாக இருக்கும் பட்சத்தில் Approve செய்ய வேண்டும் ..*

*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள், சரிபார்த்து Approve செய்வார்கள்.*

*இறுதியாக "Submit" கொடுத்தால், நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும், பிறகு நாம் விடுமுறைக்கு Apply செய்து கொள்ளலாம்!*

*நன்றி*

*தகவல் சேகரிப்பு & பகிர்வு*

*ஆ. ராமதாஸ்*
*இடைநிலை ஆசிரியர்*



விடுப்பு விதிகள் 


Post a Comment

0 Comments