தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம்வகுப்புக்கு 2023 மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல் தொடங்கி ஏப்.5-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் மத்தியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு தேவையான நடைமுறைகள் சிலவற்றை பற்றி பார்ப்போம்:
1. துணை தேர்வு
துணை தேர்வு (Auxiliary exam) என்பது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள், இத்தேர்வினை எழுதி சிறந்த மதிப்பெண் எடுக்க முடியும் அல்லது தேர்ச்சியடைய முடியும்.
பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, பங்கேற்க முடியாதவர்கள்; தேர்வில் பங்கேற்று ஏதாவது சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களும் இதில் பங்கேற்கலாம்.
முன்பு இந்த தேர்வு வருடத்திற்கு இரண்டுமுறை நடைபெற்றுவந்தது, ஆனால் தற்போது ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது. பொதுவாக ஆண்டுதோறும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து ஒரிரு மாதங்களுக்குள் இத்தேர்வு நடைபெறும்.
துணை தேர்வு எப்போது?
பிளஸ் 2வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வரும் ஜூலை 2023 மாதம், துணை தேர்வு நடத்தப்படலாம். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, ஜூன் வாக்கில் தேதிகள் அறிவிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
இதன் முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
2. மதிப்பெண் மறுகூட்டல் (Re-total), விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு (Answer book copy and Revaluation)
தேர்வு முடிவுகள் வெளியான பின் தேர்வில் தேர்ச்சியானவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் முக்கியமாக கவனிப்பது, ஒவ்வொரு பாடத்திலும் அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் தான். சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காவிடில் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று விடைத்தாளை திருத்தும்போது சரியாக மதிப்பெண்களை கூட்டாமல் விடுவது. இரண்டாவது சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமல் இருந்திருக்கலாம்.
இந்த மாதிரி ஒரு சூழலில் மதிப்பெண் குறைந்தற்கு காரணம் மேற்சொன்ன இரண்டு காரணங்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வலுவாக கருதினால் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றிற்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை:
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
12ம் வகுப்பு தேர்வர்கள் - விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது.
விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும். www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.
கட்டணம்
மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும்.
4. தாற்காலிகச் மதிப்பெண் சான்றிதழ்
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியரிடம்
பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுகூட்டல் (ரீ-டோட்டல்) மற்றும் மறுமதிப்பீடு (ரீவேலுயூஷன்) கோரி விண்ணப்பித்தவர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இல்லாத தேர்வெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
5. தேர்வுகளின் முடிவுகள்
மாணவர்கள் தேர்வு
முடிவுகளை, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும்
தேசிய தகவலியல் மையங்களிலும்,
அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் இலவசமாக அறிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் பயின்ற
பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை
அறிந்துகொள்ளலாம்.
மேலும் www.tnresults.nic.in ,
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge3.tn.nic.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
அறிவிப்புகள்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கடந்தாண்டுகளில் ஏற்கனவே முதலாம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற (+1 Arrear) பாடங்களை வரும் ஏப்ரல் 2023-ல் எழுதும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) (10ம் வகுப்பு) / மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) (12ம் வகுப்பு , 11ம் வகுப்பு ஆரியர்) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான நாட்கள். விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த தகவல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வு முடிவுகள் வெளியான சில வாரங்களில் வெளியிடும்.
தோல்வி, அடுத்த இமாலய வெற்றிக்கு!
இப்போதைய சிறிய தோல்வி, அடுத்த இமாலய வெற்றிக்கு படிக்கல். விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், பள்ளி படிப்பு கூட முடிக்காதவர். அவரது தாய் அளித்த ஊக்கத்தால், உலகம் போற்றும் விஞ்ஞானியானார். இன்னும் எத்தனையோ, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சியே பெறாமல், இரண்டாவது முயற்சியில், பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதேபோல், இன்ஜினியரிங்கும், மருத்துவமும் மட்டும், உயர்ந்த படிப்புகள் அல்ல. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் போன்ற பலர், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பும், அந்தஸ்தும் உள்ளது. இந்த படிப்பில், மதிப்பெண் வரவில்லையா; வேறு எந்த படிப்பிற்கான திறமை, நம்மிடம் இருக்கிறது என தெரிந்து கொண்டால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட, வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
வாழ்க்கையில் இத்தனை வழிகள் இருப்பதைப் பற்றித் துளியும் சிந்திக்காமல், தற்கொலை செய்து கொள்வது, வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக நினைப்பது, மற்றவர்கள் கிண்டலடிப்பரே என, தாழ்வு மனம் கொள்வது ஆகியவை, வாழ்வில் முன்னேற, எந்த வகையிலும் உதவாது. மாணவர்கள், நம்பிக்கையுடன், நல்ல, நேர்மறையான முடிவு வேண்டும்.
பிளஸ் 2வில், மதிப்பெண் குறைந்தாலும், கல்லுாரி படிப்பில், உங்கள் கவனத்தை செலுத்தி,முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள்.
கல்லுாரியிலேயே, 'கேம்பஸ்' வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.