TET Exam; Paper -2 ஆசிரியர் தகுதித் தேர்வு க்கு தயாரா? நினைவூட்டல்


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, இரண்டாம் தாள் 2023 ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக விரும்புபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு 2022 மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதல் தாள் தேர்வு 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடத்தப்பட்டது. இதில் 1,53,533 தேர்வர்கள் கலந்துகொண்டனர். முதல் தாள் முடிவுகள் 07.12.2022 இல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும்.

இதற்கான பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments