NMMS தேர்வுக்கு online ல் விண்ணப்பிக்க கடைசி நாள் - 25.01.2023 - நினைவூட்டல்

NMMS தேர்வுக்கு  online ல் விண்ணப்பிக்க  கடைசி  நாள்  - 25.01.2023

(8 ம் வகுப்பு  மாணவர்களுக்கு மட்டும்) 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் 

👉 https://apply1.tndge.org/ என்ற  இணையதள முகவரிக்கு செல்லவும் 


👉 School Registration
(இத்தேர்விற்கு விண்ணப்பிப்பது இதுதான் முதல் முறை என்றால் மட்டும்  தங்கள் பள்ளியை பதிவு செய்ய வேண்டும். இணையத்தில் உள்ள School Registration  என்பதை கிளிக் செய்து பள்ளியை பதிவு செய்ய வேண்டும் பள்ளி பதிவு செய்தவுடன்  சம்பந்தப்பட்ட மாவட்டத்தினுடைய CEI  அலுவலகத்தில் இருந்து அதற்கு APPROVED வழங்கிய பின்பு தான் நமது பள்ளியின் LOGIN ACTIVATE  ஆகும். ஏற்கனவே  Registration செய்து user ID password வைத்திருப்பவர்கள் நேரடியாக school login பகுதிக்கு  செல்லலாம்.  

👉 Click ----  SCHOOL LOGIN 
பள்ளியின் Login Activate  ஆன பின்பு அல்லது ஏற்கனவே ஆண்டுதோறும்  விண்ணப்பிப்பவர்கள்  தங்கள் பள்ளி USER ID,  PASSWORD  வைத்திருப்பவர்கள
இந்த பகுதியை கிளிக் செய்து SCHOOL LOGIN செய்து உள்ளே செல்ல வேண்டும் 

👉Enter ----- USER ID,  PASSWORD 
இது  தங்களது  பள்ளியின்  EMIS USER ID, PASSWORD தான் இதற்கும் பயன்படுத்த வேண்டும் 

👉Click -----  Pull Student data ( EMIS portal) 
Login செய்த பின்பு  Dashboard பகுதில்  உள்ள  Pull student data  என்பதை  click செய்ய வேண்டும்.  இப்படி செய்யும் போது  தங்களது  பள்ளியில் உள்ள 8 வகுப்பு மாணவர்கள் அனைவரது தகவலும்   இங்கு வந்து விடும்.  
👉Click ----- Apply  NTS/ NMMS exam 

இந்த  பகுதியை Click செய்து  பின்னர்  Apply  form எனபதை  தேர்வு  செய்யவும்.
  

👉Click ----- APPLY 

தற்போது தங்கள் பள்ளியில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுடைய பெயர் பட்டியல் வரிசையாக வரும் அந்த பெயருக்கு நேரே உள்ள Apply என்ற பட்டனை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். 

👉Fill Form 
மாணவர்கள் விவரம்  அனைத்தும்  தானாக  fill ஆகிவிடும்.  அதிகப்படியான சில விவரங்களை மட்டும் தேர்வு செய்து.  50kb  க்குள் அளவுள்ள மாணவர் புகைப்படத்தை upload செய்ய வேண்டும்.  
புகைப்படத்தின் அளவினை  குறைக்க  https://photoresizer.net/editorஇந்த  இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  
👉Click Make Payment
இந்த  பகுதியை  click செய்து  அனைத்து  மாணவர்களுக்கும்  ஒரே  தவணையாக  கட்டணம்  செலுத்தலாம். ( ஒரு மாணவருக்கு  ரூ. 50மட்டும்) Online payment தான் கட்ட வேண்டும்.  



👉 ONLINE PAYMENT 
   Credit card --- Bank  Charge 2%
   Debit card  ----Bank  Charge 2%
  Net banking ----Bank  Charge ரூ. 20

ஏதாவது  ஒரு  முறையை  தேர்வு செய்து  கட்டணம்  செலுத்த வேண்டும்.  ( Net banking முறைதான்  எளிதாக பணம்  credit ஆகிறது) 

👉 Click ---- Reports

DashBoard ல்  இந்த பகுதிக்கு சென்று கேட்கப்படும் விவரங்களை கொடுத்து Summary Report  கொடுத்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களும் பெயரும் கட்டணம்  செலுத்திய விவரமும் PDF ஆக  download ஆகும்.  
 👉Candidate Report  கொடுத்தால்  ஒவ்வொரு மாணவருக்கான தனித்தனியான Application forms PDF ல்  download  ஆகும் அதை print எடுத்து வைத்துக் கொள்ளலாம் நன்றி



By 

JUST RELAX TEACH





பழைய செய்தி  நினைவூட்டல்  


ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2022-2023-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2023 பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் என்.எம்.எம்.எஸ்., (NMMS - National Means cum Metric Scholarship) எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆனது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்.

இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தகுதி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க, ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் இருப்பதுடன்,  ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். 

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும். பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 

ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.

தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, என்எம்எம்எஸ் தேர்வு குறித்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித்துறை எடுத்துவருகிறது. 

பாடதிட்டம்:

முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும். 

90 மதிப்பெண்ணிற்கு மனத்திறன் தேர்வு, 90 மதிப்பெண்ணிற்கு படிப்பறிவு திறன் தேர்வு என 2 வகையான தேர்வுகள் நடந்தப்படும்.

எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை நடைபெறும்.

மேலும் விபரங்களைக்கு:



Post a Comment

0 Comments