தினம் ஒரு கதை!#கடந்து_வந்த_பாதை


முன்னொரு காலத்தில், ஒரு பெரிய மந்திரவாதி ஒருவர் வாழ்ந்து வந்தார். 

ஒரு நாள், அவர் கிராமத்தின் வழியாக நடந்து கொண்டிருந்த போது சுண்டெலி கீழே விழுந்து கிடந்ததை அவர் கவனித்தார், அந்த சுண்டெலியை கையில் எடுத்து அதற்கு சில அரிசியை உணவாக அளித்தார். 

பிறகு, ஒரு நாள், பூனை ஒன்று சுண்டெலியை துரத்துவதை மந்திரவாதி கவனித்தார். தன்னுடைய செல்லப்பிராணியான சுண்டெலியை பூனை கொன்று விடக்கூடும் என பயந்துக் கொண்டு, அவர் அந்த சுண்டெலியை பூனையாக மாற்றி விட்டார். 

பூனையாக மாறிய சுண்டெலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் என அவர் எண்ணினார். அடுத்த நாளே, பூனையாக மாறிய சுண்டெலியை ஒரு புலி பயமுறுத்தியது, 

உடனடியாக மந்திரவாதி அந்த சுண்டெலியை மீண்டும் புலியாக மாற்றிவிட்டார். இதையெல்லாம கவனித்துக் கொண்டிருந்த கிராமவாசிகள், 'அது புலி அல்ல! இது ஒரு சுண்டெலி, மந்திரவாதி தான் சுண்டெலியை புலியாக மாற்றிவிட்டார். 

அது நம்மை பயமுறுத்தவும் பயமுறுத்தாது, நம்மை சாப்பிடவும் சாப்பிடாது" என்று பேசிக் கொண்டார்கள். 

மக்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த புலி மந்திரவாதி மீது கோபம் கொண்டது. 'மந்திரவாதி உயிருடன் இருக்கும் வரை, என்னுடைய உண்மையான இயல்பு பற்றிய உண்மை எப்போதும் பேசப்படும்". எனவே அந்த மந்திரவாதியை கொன்று விட வேண்டும் என நினைத்தது. 

ஆனால், புலி வருவதைப் பார்த்த மந்திரவாதி, அதனுடைய திட்டத்தை புரிந்துகொண்டு, 'ஒரு சுண்டெலி வடிவத்தில் மீண்டும் வருக" என்று கூறினார். உடனே புலி சுருங்கி சுண்டெலியாக மாறி விட்டது. 

நீதி : நாம் எந்த உச்சத்திற்கு சென்றாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது.

Post a Comment

0 Comments