உயர் கல்வி பெற்றதன் அடிப்படையில் பணிக்காலத்தில் 3வது ஊக்கத்தொகை கோர முடியாது - ஆசிரியர் வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு.
அரசு கொள்கை விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் 2 ஊக்கத்தொகை அதாவது 4 சம்பள உயர்வு மட்டுமே பெறமுடியும்.
எம்பில் படித்துள்ளார் என்பதற்காக 3வது ஊக்கத்தொகையை கோர முடியாது. கடந்த 1993ல் கல்வி, அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை வௌியிட்டுள்ள அரசாணையில் ஊக்கதொகை சம்பள உயர்வு 2 முறை மட்டுமே என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற முழு அமர்வின் அடிப்படையில் ஆசிரியை 3வது ஊக்கத்தொகை சம்பள உயர்வை கோர முடியாது என்பதால் அவருக்கு 3வது ஊக்கத்தொகை சம்பள உயர்வு வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.l
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.