இந்தியாவில் உள்ள சில விசித்திரமான இபிகோ சட்டங்கள் ....



1).Treasure trove act of 1878:
நீங்கள் கீழே கிடந்து கண்டெடுக்கும் பணம் 10 ரூபாய்க்கும் அதிகம் இருந்தால் அதை நீங்கள் வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றம். 10 ரூபாய்க்கும் குறைவான பணத்தையே நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

2). Indian air craft act of 1934:

முன் அனுமதி பெறாமல் பட்டமோ, பலூனோ வானத்தில் பறக்கவிடுவது குற்றம்.

3). Dentist act of 1948 chapter 5, section 49:

சாலையோரம் உள்ளவர்களிடம் பல்லுக்கும், காதுக்கும் சிகிச்சை பெறுவது குற்றம். உரிய மருத்துவமனைக்கே செல்ல வேண்டும்.

4). FCRA 2010:

பண்டிகைகளை முன்னிட்டு எந்த வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் பரிசுகளை நீங்கள் பெற்றாலும் இந்த சட்டத்தின்படி லஞ்சம் வாங்கியவர்களாக கருதப்படுவீர்கள். சிறை தண்டனை பெற வாய்ப்புண்டு.

5). இந்தியாவின் சில மாநிலங்களில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆகும். 18 வயது ஆனவுடன் ஓட்டுரிமை கிடைக்கும். ஏன் திருமணம் கூட செய்து கொள்ளலாம். ஆனால் மது அருந்த 25 வயது ஆக வேண்டும். (ஹா ஹா ஹா. எங்க புள்ளிங்கோ சில, பாடம் கற்கும் போதே பானம் பருக கற்றுக் கொள்ளும், அதை வீடியோ எடுத்தும் போடும்).

6). Section 309

தற்கொலை முயற்சி சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். முயற்சியில் வெற்றி பெறுவது குற்றமல்ல.

7). ஆந்திராவில் மோட்டார் வாகன ஆய்வாளராக வேண்டுமானால் ஆரோக்கியமான பற்களைக் கொண்டிருக்க வேண்டும். (எதுக்குனு தெரியல). அதற்கான சோதனையிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

8). Indian srius act 1887:

5 ஸ்டார் ஹோட்டல்கள் உட்பட அனைத்து ஹோட்டல்களிலும் குடிநீர்வசதி, கழிப்பறை வசதிகளை வழிபோக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

9). Motor vehicle act, section 129:

ட்ராபிக் போலிஸ் உங்களது வாகனத்தின் சாவியைப் பறிக்கக் கூடாது.

10). Criminal procedure code section 46:

பெண்களை காலை 6 மணிக்கு முன்பும், மாலை 6 மணிக்கு பின்பும் கைது செய்யக் கூடாது.

சட்டம் அறிவோம்.... 

Post a Comment

0 Comments