தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.1.2023

தமிழ்நாடு வனப்பகுதி (தொகுதி-IA பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத் தேர்விற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2023 ஜனவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  உதவி வனப் பாதுகாவலர்

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

வயதுவரம்பு: 

01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயதுவரம்பு நிறைவடைந்திருக்க வேண்டும். 34 - 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி: 

வனவியல்,  தாவரவியல், விலங்கியல்,  இயற்பியல், வேதியியல்ஸ, கணிதம், புள்ளியியல், புவியியல், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், வேதியியல் பொறியியலில், கணினி/கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை பட்டம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: 

விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 163 செ.மீட்டரும், பெண்கள் 150 செ.மீட்டரும், மார்பளவு சாதாரணமான நிலையில் ஆண்கள் 84, விரிந்த நிலையில் 5 செ.மீட்டரும், பெண்கள் மார்பளவு சாதாரணமான நிலையில் 79 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 5 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழி தகுதி: விண்ணப்பத்தாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: 

பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரு.100. முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். 

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

கட்டணம் செலுத்துவோர் ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். 

தேர்வு: முதல்நிலைத் தேர்வு (ஒற்றை தாள்-கொள்குறி வகை): 

பொது அறிவு பிரிவில் 175 கேள்விகள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பிரிவில் 200 கேள்விகள் என 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேர தேர்வாக நடைபெறும். 

முதன்மைத் தேர்வு: 

கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் -I 100 மதிப்பெண், பொது அறிவு தாள்-II 200 மதிப்பெண்கள், தாள்-III பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்கள், தாள்-VI  விருப்பப்பாடம்-1, 300 மதிப்பெண்கள், தாள்-V விருப்பப்பாடம்-2, 300 மதிப்பெண், நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் - 120 மதிப்பெண்கள் என மொத்தம் 1020 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். 
 
தேர்வு செய்யப்படும் முறை: 

முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்க நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதமை எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.

முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpscexams.in  
www.tnpsc.gov.in  ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2023

முதன்மை எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.1.2023

விளம்பர எண். 642    அறிக்கை எண். 36/2022 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://www.tnpsc.gov.in/Document/tamil/36_2022_ACF_TAM.pdf

Post a Comment

0 Comments