எண்ணும் எழுத்தும் - பருவம் 2 ற்கான SA தேர்வு வினாத்தாள் PDF - TNSED APP ல் வெளியீடு

எண்ணும்  எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு (SA) தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. கடந்த 13. 12 .2022 அன்று முதல் 23 .12 .2022 வரை 1,2,3 வகுப்புகளுக்கு தேர்வுகள் இணையதள வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஆன்லைன் தேர்வு மட்டுமே மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எழுத்து தேர்வாக சோதிக்க வேண்டும் என்று விரும்பினால் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வினாத்தாள் PDF தரவிறக்கும் செய்து தனியாக தேர்வு நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் தற்போது TNSED APP VERSION  0.0.51 அப்டேட்டில் அனைத்து SA தேர்வு  செயல்பாட்டிலும் அந்தந்த பாடத்திற்கு  அரும்பு ,மொட்டு ,மலர் மாணவர்களுக்கான வினாத்தாள் PDF ல் கொடுக்கப்பட்டுள்ளது.  தேவைப்படும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது இந்த pdf ல் தேர்வு நடத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்பதும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வு மட்டுமே இறுதி  முடிவாகும்.

Post a Comment

0 Comments