DAதாமதம், CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநாட்டிற்குப் பின் நடைபெறும் மாநிலம் தழுவிய முதல் ஆர்ப்பாட்டம் இன்று(03.11.2022 ) நடைபெறுகிறது.

           
              Jacto George மாநில மாநாடு சென்னையில் நடைபெற்ற போது முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை மனுக்களை  வழங்கின. 

           அவற்றில் சில அரசாணை சம்பந்தமான அறிக்கை , தற்காலிக பணியாளர்கள் 60 வயது வரை  தற்காலிக பணியாளர்கள் தான் என்ற சில அறிவிப்புகளை மட்டும்  வெளியிட்டு அந்த மாநாடு அதோடு நிறைவு செய்யப்பட்டது.

           Cps  ரத்து போன்ற  எந்த விதமான அறிவிப்புகளும், அதை  நடைமுறைப்படுத்த  எந்த முன்னேற்பாடுகளோ, சமிக்கைகளோ வெளியிடப்படவே இல்லை . இதுநாள் வரை ஜாக்டோ ஜியோவில்  உள்ள அனைத்து சங்கங்களும் தமிழக அரசு சரி செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் .

          கடந்த அகவிலைப்படி உயர்வில்  ஆறு மாத நிலுவைத்தொகை   வழங்கப்படவில்லை.  அதேபோன்று மீண்டும் தற்போது மத்திய அரசு அறிவித்து ஐந்து மாத காலங்கள் ஆகியும்  இதுவரை வழங்காமல்  தமிழக அரசு தாமதித்து வருகிறது.  

 எனவே ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ  மாநாட்டிற்கு பின்பு முதல் முறையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி சார்பாக இன்று (03.11.2022) மாலை 5 மணியளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.

     ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியப் பெருமக்களும்  கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டுமென சங்கப் பொறுப்பாளர்கள்  வேண்டுகோள்  விடுத்து வருகின்றனர் . TNPTF ன்  மாநிலச்செயலாளர் தோழர்.
திரு.ச.மயில் அவர்கள்  புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்   கலந்து கொள்கிறார்.  

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் வெல்லாது.!!!!!

 வேண்டியதை கேட்டுத்தான் பெறவேண்டும்.!!!! 

 ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!! 👍👍👍👍

Post a Comment

0 Comments