பெண்கள் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் எப்படி அவர்களால் இது முடிகிறது?

       மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக்கும். இதற்குள் தான் இத்தனை சூட்சுமம் இருக்கிறது. உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும், சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான், நமது சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

         இன்றைக்கு இருக்கும் கம்ப்யூட்டரோடு மூளையை ஒப்பிட்டால், மூளை மிக மெதுவாக செயல்படும் ரகம்தான். சராசரியாக மூளை 1.5 கிலோ எடை கொண்டது. ஆனால் இந்த மூளை அமைப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆணை விட பெண்ணின் மூளையை அளவில் ஒப்பிடும்போது குறைவுதான். காரணம் பெண் இயற்கையாகவே ஆணைவிட குறைவான உடலை கொண்டு இருப்பவர்கள் என்பதெல்லாம் முன்னரே கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். இதனிடையே மறதி நோயான ‘அல்சமீர்’ நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43,034 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதும் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது குறிப்பாக சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.
பெண்களின் முன்பக்க மூளை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது பச்சா தாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர்.அதே போன்று பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின் போது மன அழுத்தம், தூக்க மின்மை, உணவு சாப்பிடுவதில் சீரற்ற தன்மை, கவலை எழுதல் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.மொத்தத்தில் ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
#iron lady
#srrong women
#women
#brain

Post a Comment

0 Comments