*கஞ்சா போதையில் உருட்டை கட்டையால் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.*
விழுப்புரம்: நவம்பர் 16:
விழுப்புரம் மாவட்டம் , கண்டமங்கலம் அரசு மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியரை உருட்டு கட்டைகளால் கஞ்சா போதையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் தாக்கினான்.
வகுப்பில் ஒழுங்கினமாக நடந்து கொண்ட மாணவனை தலைமையாசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் கஞ்சா போதையில் தன் வகுப்பு நண்பர்களுடன் தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்து
தலைமையாசிரியரை உருட்டுக்கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இரத்த வெள்ளத்தில் அறைக்குள் கிடந்த தலைமை ஆசிரியரை மற்ற ஆசிரியர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை (ICU) பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருதறார்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.