Online மூலமாக விண்ணப்பித்து தமிழ்வழிச்சான்று (PSTM Certificate) பெறுவது எப்படி?



        தமிழக அரசு பணிகளில் தமிழ் வழி பயின்றோருக்கு 20% இட ஒதுக்கீடு உண்டு. அந்த இட ஒதுக்கீட்டினை பெறுவதற்கு ஒன்று முதல் பணிக்கு ஏற்ப கல்வி தகுதி(10,12,பட்டப்படிப்பு) வரை தமிழில் படித்திருக்க வேண்டும். இதுவரை தமிழ் வழி சான்றிதழ் பெறுவதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர்களைத் நேரடியாகத் தொடர்பு கொண்டு நேரடியாக பெரும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.  தற்போது  தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்ததற்கு  ஏற்ப தமிழ் சான்றிதழ் ஆன்லைனில் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

 Online  மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

1. Click the link  👇

2. Login with user 🆔 password 
   Or 
Mobile number 
Or 
புதிய நுழைவு என்றால்  click new registration (Fill details 
Name,  address,  mobile number etc..... )

3.  login 

4. Dashboard   - ல் Revenue,  services....  எனறு  பல தெரிவுகள்  இருக்கும்  அதில்  Services என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் 

5. வலது  மேல்புறத்தில் இருக்கும்  Search ஐ click செய்து  PSTM என டைப் செய்து  தேட வேண்டும்.  

6. PTSM CERTIFICATE APPLY ON GOVERNMENT SCHOOL ECT....   என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் 

7. பின்னர்  
பெயர், 
 தந்தை தாய் பெயர், 
மொபைல்  எண், 
பள்ளி அமைந்துள்ள மாவட்டம், வட்டம், 
ஊர் தேர்வு செய்து  

8. பயின்ற வருடம் (DD/MM/YYY)
 From  ------   to

9. பயின்ற வகுப்புகள்
 From ----------to 

10. ஆதாரம்  இருந்தால்  பதிவேற்ற வேண்டும் (1mb க்குள்)  mark sheet,  TC,  admission record,  🆔 card if any.  (இல்லை என்றால்  வேண்டாம் கட்டாயமில்லை) 

11. பல பள்ளிகளில் பயின்று இருநதால் ஒவ்வொரு  பள்ளிக்கும் ADD பட்டனை  click செய்து  சேரத்துக்கொள்ள வேண்டும். 

12. Click submit 

13. Make payment online 
Debit card
credit card 
Net banking 
UPI 
ஏதாவது ஒரு முறையில்  ரூ. 60 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் 

14. இறுதியாக கிடைக்கும்  விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி வழக்கம் போல சாதி சான்றிதழ்,  வருமான சான்றிதழ் status பார்ப்பது போல  Check பண்ணி பாரத்துக்கொள்ளலாம்.  

சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விண்ணப்பம்  அனுப்பப்பட்டு பள்ளியில் உள்ள அசல் ஆவணங்களை சரிபார்த்து சரியாக இருந்தால் சான்றிதழ் வழங்கப்படும்.  தவறாக இருக்கும் பட்சத்தில் நிராகரிக்கப்படும் 



Post a Comment

0 Comments