விண்வெளி அறிவியல் படிப்பு - இஸ்ரோவின் இலவச ஆன்லைன் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்!
விண்வெளி சார்ந்த படிப்புகள் மாணவர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒன்று. மாறி வரும் சூழலில், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அவ்வப்போது நடத்தி வருகிறது.
டேராடூனில் இருக்கும் இஸ்ரோவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (ஐஐஆர்எஸ்) துறை நடத்தும் ஜியோ கம்ப்யூடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல விண்வெளி அறிவியலாளர்களால் நடத்தப்படும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
தெரிந்துகொள்ள வேண்டியவை:
● இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
● நாள்தோறும் மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.
● ஆங்கில வழி வகுப்பு இது.
● பயிற்சியில் பங்கேற்பவர்கள் வகுப்பின்போது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
● இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்த மாணவ மாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
மாநில, தேசிய அளவிலான அரசு பணிகளில் இருப்பவர்கள், ஆராய்ச்சியாளார்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
● இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://elearning.iirs.gov.in/edusatregistration/student
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.