தெற்கு ரயில்வே 3154 பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது!

தெற்கு ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது!
தெற்கு ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது!
தெற்கு ரயில்வேயில் (Southern Railway) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Apprentices பணிக்கு என மொத்தமாக 3154 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 31.10.2022 அன்று வரை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்Southern Railwayபணியின் பெயர்Apprenticesபணியிடங்கள்3154விண்ணப்பிக்க கடைசி தேதி31.10.2022விண்ணப்பிக்கும் முறைOnline
Southern Railway காலிப்பணியிடங்கள்:
தெற்கு ரயில்வேயில் (Southern Railway) காலியாக உள்ள Apprentices பணிக்கு என மொத்தமாக 3154 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Signal & Telecommunication Workshop / Podanur – 1284 பணியிடங்கள்
Carriage Works, Perambur – 1343 பணியிடங்கள்
Central Workshop, Golden Rock – 527 பணியிடங்கள்
தெற்கு ரயில்வே வயது வரம்பு:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Freshers ஆக இருப்பின் 29.09.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 22 வயதிற்குள் உள்ளவராகவும், Ex-ITI, MLT ஆக இருப்பின் 29.09.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவராக இருக்க வேண்டும்.
தெற்கு ரயில்வே உதவித்தொகை:
Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை மாத உதவித் தொகையாக கொடுக்கப்படும்.
Southern Railway தேர்வு முறை:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி இறுதியாண்டில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு Merit list என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
Southern Railway விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PH / Women – விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மற்ற நபர்களுக்கு – ரூ.100/-
Southern Railway விண்ணப்பிக்கும் முறை:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (31.10.2022) sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments