செய்தித்துளிகள்!:
சட்டமன்றத்தில் கடும் அமளி:
இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி.
எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி சபாநாயகரிடம் இபிஎஸ் வாக்குவாதம்.
அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சபை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு.
எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி. பிற பதவிகள் கட்சிகளின் விருப்பத்துக்கேற்பவே உள்ளன.
சபையில் இருக்கைகள் ஒதுக்குவது எனது முடிவு; அதில் யாரும் தலையிட முடியாது- சபாநாயகர் அப்பாவு.
தனக்கான இருக்கையை மாற்றித்தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கேட்பதற்கு உரிமை உள்ளது.
ஆனால் வேறு ஒருவருக்கான இடத்தை மாற்றுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது- சபாநாயகர் அப்பாவு.
மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில், இன்று அரசினர் தனித்தீர்மானம் தாக்கல் ஆகிறது.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
மழைக்கால கூட்டத்தொடர்: தமிழ்நாடு சட்டப்பேரவை 2வது நாளாக இன்று கூடுகிறது
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை வருகை
அதிமுக உறுப்பினர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் வருகை.
சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி வருகின்றனர்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளி!
இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி.
எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி சபாநாயகரிடம் இபிஎஸ் வாக்குவாதம்.
எதிக்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக தாம் அளித்த கடிதத்திற்கு என்ன முடிவெடுக்கப்பட்டிருக்கிறது?
- சபாநாயகரிடம் ஈபிஎஸ் கேள்வி.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் எடுத்த முடிவு பற்றி சட்டப்பேரவையில் அறிவிப்பேன் - சபாநாயகர் அப்பாவு
இந்தி எதிர்ப்பு தீர்மானம், அருணா ஜெகதீசன் அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய தீர்மானத்தை நீர்த்துப்போக செய்ய கலகம் செய்கிறீர்கள்.
இபிஎஸ் ஆதரவாளர்கள் கலகம் செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவாளர்களை பேரவை காவலர்கள் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு!
🔴 #BREAKING
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
சசிகலா,
கே எஸ் சிவகுமார்,
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.
ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன.
2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை.
ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன.
-ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை- அறிக்கையில் தகவல்.
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது- ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்.
🔴
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றது தமிழ்நாடு அரசு.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை.
17 காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.