4,5 வகுப்புகளுக்கு ஒரே நாளில் மொத்த கேள்வித்தாட்களையும் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வி அமைச்சருக்கு அங்கு வைத்திருந்த ஆசிரியர் மனசுப் பெட்டி வழியே வந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து பார்த்தபொழுது 4, 5 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதைப்போல,
ஒவ்வொரு நாளும் கேள்வித்தாளைப் பெற்றுச் செல்ல வேண்டும்.
வினாத்தாட்கள் பள்ளிகளுக்கு மொத்தமாக வழங்கப்பட மாட்டாது என உத்தரவு பிறக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பது தவறான நடைமுறையாகும் என கோரிக்கை மனு வரப்பெற்றிருந்தது..

இது தொடர்பாக ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமாரிடம் கேட்டறிந்த பள்ளிக்கல்வி அமைச்சர் உடனடியாக உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு,
ஆசிரியர்களை அலைய விடுதலும்,
ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள்,
போக்குவரத்து வசதியற்ற சூழலில்
பல்வேறு கிராமப்புற தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்படும்பொழுது,
தனியார் நர்சரிப் பள்ளிகள் எல்லாம்
அப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வினாத்தாட்களை வடிவமைத்துக்கொள்ளும்பொழுது,
4 , 5 வகுப்புகளுக்கு மட்டும்,
இதுபோன்ற நடைமுறைகளை மேற்கொள்ளுதலில்
இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து, அக்கோரிக்கைகளின் நியாயம் அறிந்த அமைச்சர், 
திங்கட்கிழமையே மொத்தமாக அனைத்து வினாத்தாட்களையும் உரிய பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால், 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு பதற வைக்கும் அளவிற்கு தேர்வு வேண்டாம் என்றோ வழக்கமான முறையில் பள்ளியிலே கேள்வித்தாள் தயாரித்து தேர்வை நடத்துகிறோம் என்றோ எந்த ஆசிரியரும் ஆசிரியர் மனசும் பெட்டியில் போடவில்லையா அல்லது அமைச்சர் அப்படி வராதது போல் காட்டிக்கொண்டாரா என்று தெரியவில்லை.


அதனைத்தொடர்ந்து  தற்போது  இயக்குனர் இதே செய்தியை  voice message வழியாக  முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.  


ஏற்கனவே அஇஅதிமுக அரசு பாஜக அரசு சொன்னதை அப்படியே நடத்தியது என்றும் திமுக திட்டங்களின் பெயரை மாற்றி நடத்துகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிஸன்கள் பின்னி எடுப்பது வேறு கதை.

Post a Comment

0 Comments