2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வு நடைபெற்றது. தமிழ் வழியில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
தற்பொழுது பணி நாடுநர்கள் தங்களது விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழை சரிபார்த்ததன் அடிப்படையில் 1:2 என்ற அடிப்படையில் பாட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு க்குதேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வழங்கப்பட்டுள்ளது . இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தேவர்கள் தங்களது அனைத்து உண்மைச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை தயாராக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் . யாருக்கும் தனியாக எந்த தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது இந்த இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு பெறுவதற்கான தேதி அறிவிக்கும் சமயத்தில் இந்த இணையதளப்பக்கத்தில் ஆளறிச் சான்றிதழ் மற்றும் பிற படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அந்த படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பணிநாடுனர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வந்து கலந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
நன்றி
Certificate Verification Short List - Click Here
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளுக்கு
https://forms.gle/ZUYC2Ud5wxcapDku6
இந்த link சென்று பதிவு செய்யவும்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.