ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிக்கைச் செய்தி - தமிழ்வழிச் சான்று குழப்பம் தீர்க்கப்படும் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021

 ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிக்கைச் செய்தி 

ஆசிரியர் தேர்வு வாரியம் 2020-2021க்கான முதுகலைப்பட்டதாரி , உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த 09.09.2021 அன்று அறிக்கை வெளியிட்டது. இணையதள விண்ணப்பத்தைத் தொடர்ந்த விண்ணப்பதாரர்கள் பல்வேறு  சிக்கல்களை எதிர்கொண்டனர். 

விண்ணபதாரர்கள் விண்ணப்பிக்கும் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

 தமிழ் வழி் சான்று தொடர்பான தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை.

 அசல்- நகல்  சான்றிதழ் குறித்து தெளிவான விளக்கம் இல்லை. 

கல்வி பயின்ற வருடம் சார்பான குளரறுபடிகள் (20வருடம் , 30 வருடம் எனக்காண்பித்தது.)

பி.எட் க்கு பின் இளங்கலை பயின்றால்  ஏற்றுக்கொள்ளவில்லை 

என பல்வேறு கேள்விகளுக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

தற்போது இரைவு 10.30 அளவில் ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிக்கைச் செய்தி  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்வழிச் சான்று குழப்பம் சார்பான மென்பொருள் குழப்பம்  தீர்க்கப்படும்  எனவும் மேலும்  விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021 மாலை  5.00 மணி வரை எனவும் கூறப்பட்டுள்ளது. 


ஆனால் அரசாணை எண் 82 . 16.08.2021 ன் படி என்ற நாசுக்கான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதால். 1 முதல் 12 வரை தமிழ்வழிபயின்ற சான்று பதிவேற்றம் செய்யும் சூழல் ஏற்படுமோ எனக் கூறப்படுகிறது. 


மேலும் புதிய விண்ணப்பம் தற்காலிகமாக இரவு 11.59 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதனால் ஏற்கனவே விண்ணப்பித்த அனைவருக்கும் மீண்டும் திருத்தம் செய்ய (தமிழ்வழிச்சான்று)  வாய்ப்பளிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.






Post a Comment

0 Comments